For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா! ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலையும் அளித்தார்!!

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா! ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலையும் அளித்தார்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா. இச்சந்திப்பின் போது தம்மை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் ஆளுநர் வித்யாசகரிடம் சசிகலா கொடுத்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். தம்மிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை கட்டாயமாக வாங்கினார் சசிகலா என்பது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு.

Sasikala Natarajan stakes claim to form Government

இதையடுத்து அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தமக்கே இருப்பதாக அனைவரையும் பேருந்துகளில் ஏற்றி ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் சிறைவைத்துள்ளது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டி.

இந்த நிலையில் இன்று ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகை தந்தார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், தம்முடைய ராஜினாமாவை கட்டாயப்படுத்தி வாங்கினார் சசிகலா; சட்டசபையில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்த சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன் தம்மை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் விவரங்களையும் ஆளுநர் வித்யாசகரிடம் அளித்தார் சசிகலா. முன்னதாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

English summary
ADMK Interim General Secretary Sasikala today met TamilNadu Governor and staked claim to form the New govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X