மருத்துவமனையில் ஜெ.... சசிகலா புஷ்பா சொன்ன மாதிரியே அதிமுகவினருக்கு கட்டளையிடும் சசிகலா!

By:

சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும் என்கிற கட்டளையை அவரது தோழி சசிகலா நடராஜனே பிறப்பித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2-வது நாளாக இன்றும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

குவிந்த அதிமுகவினர்

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பெருமளவும் திரண்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்பானது.

யாரும் சந்திக்கவில்லை

இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் பார்த்துவிட்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் சசிகலா, இளவரசியைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

சசிகலா உத்தரவு

அமைச்சர்கள், அதிமுகவினர் பெருமளவில் குவிந்தததால் ஓ. பன்னீர்செல்வம், பொன்னையன் உள்ளிட்ட சிலரை மட்டும் சசிகலா மருத்துவமனைக்குள் வர உத்தரவிட்டிருந்தார். அவர்களிடம், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக வெளியே போய் பேட்டி கொடுத்துவிட்டு அனைவரும் தலைமை செயலகத்துக்குப் போய்விடுங்கள்.. நிர்வாகிகள் யாரும் சென்னைக்கு வரக் கூடாது என அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தெரிவித்துவிடுங்கள் என அடுக்கடுக்கான கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார் சசிகலா.

அன்று சசிகலா புஷ்பா சொன்ன மாதிரியே


சசிகலா சொல்வதை ஆமோதித்தபடியே அமைச்சர்களும் பொன்னையன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அதிமுக 'சின்னம்மா கைக்கு போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அப்போது பாருங்கள்.... வரலாறு பேசும் என கூறியிருந்தார். அவர் சொன்னதுபோலவே அதிமுகவில் நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன...

அப்ப "வரலாறு பேசுமோ"?

 

English summary
ADMK sources said After Jayalalithaa hospitalized now her confident Sasikala Natarajan trying to control the party cadres.
Please Wait while comments are loading...

Videos