ஜெ.வுக்காக பார்த்தசாரதி கோவிலுக்கு போகும் சசிகலா....தர்காவில் அமைச்சர்கள் தொழுகை!

By:

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார். அதேபோல் சென்னை அண்ணாசாலை தர்காவில் அமைச்சர்கள் சிலர் தொழுகை நடத்த உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

Sasikala to offer prayers for Jayalalithaa in Parthasarathy temple

இன்று 2-வது நாளாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜெயலலிதா நலமுடன் வீடு திரும்ப வேண்டி அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சசிகலா வழிபாடு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் அமைச்சர்கள் சிலர் தொழுகை நடத்த ஏற்பாடு செய்துள்ளனராம்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa's confidant Sasikala will offer at parthasarathy temple.
Please Wait while comments are loading...

Videos