ஜெயலலிதாவுக்குப் பயப்பட வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.. சசிகலா புஷ்பா "தில்" பேச்சு!

By:

சென்னை: கைது செய்து மிரட்டலாம் என்பதெல்லாம் தம்மிடம் நடக்காது என்று அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா சவால் விட்டுள்ளார்.

நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டி:

கேள்வி: உங்களின் முன்ஜாமீன் மனு ரத்தாகியிருக்கும் சூழலில், உங்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. "கைது செய்யப்படுவோம்' என்கிற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?

பயம் எதுக்கு?

பதில்: தவறு செய்பவர்களே சுதந்திரமாக, அதிகார தொனியில் நடமாடும்போது எந்தத் தவறும் செய்யாத நான் எதுக்கு பயப்படணும்? நம்முடைய ஜுடிசியல் சிஸ்டமும் டெமாக்ரசியும் வலிமையாக இருக்கும்போது, தனிப்பட்ட ஒரு முதலமைச்சருக்கோ (ஜெயலலிதா) அரசாங்கத்துக்கோ பயப்படவேண்டிய அவசியம் கிடையாது.

என்கிட்ட நடக்காது

அவகாசம் முடிந்தாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று என் தரப்பு நியாயத்தைச் சொல்லி ஜாமீன் பெறுவேன். கைது செய்து மிரட்டுவதெல்லாம் என்கிட்டே நடக்காது.

பாவம் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்...

கேள்வி: உங்களிடம் பணிபுரிந்த 2 பெண்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர வைக்கிறதே?

பதில்: புகார் கொடுக்க வந்த அந்த பெண்களை கவனியுங்கள். எந்தளவுக்கு அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்பது அவர்களின் முகமே காட்டிக் கொடுக்கிறது. அப்பாவிப் பெண்களை எனக்கு எதிராக மிரட்டி, பயமுறுத்தி புகார் சொல்ல வைப்பதுதான் ஒரு முதல்வரின் வேலையா?

 

மிரட்டியவர்கள் மீதுதான் வழக்கு போடனும்

இப்படி மிரட்டி புகார் சொல்ல வைப்பவர்கள் மீது ஒரு வழக்குப் போடணும். அப்போதுதான் அதிகாரத்திலிருப்பவர்கள் திருந்துவார்கள்; அப்பாவிப் பெண்களும் காப்பாற்றப்படுவார்கள்.

இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

 

English summary
Expelled ADMK MP Sasikala Pushpa said that she will again move SC for bail.
Please Wait while comments are loading...

Videos