சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி மரணம்... பரோலில் வருவாரா சசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் அண்ணியும் டிடிவி தினகரனின் மாமியாரும் வெங்டேசின் அம்மாவுமான சந்தானலட்சுமி இன்று உடல்நலக்குறைவார் மரணமடைந்தார்.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியாவார் சந்தானலட்சுமி . இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சந்தானலட்சுமி.

Sasikala Sister in law passes away

இன்று காலையில் சந்தானலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

சசிகலாவின் அண்ணி மறைவிற்கு அஞ்சலி செலுத்த சிறையில் இருந்து பரோலில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பினால் மரணமடைந்தார். அப்போதே பரோலில் சசிகலா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் குடும்ப உறவினர்கள் அடுத்தடுத்து மாரடைப்பினால் மரணமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sasikala is a VIP prisoner, proves CCTV footage, watch video | Oneindia News

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Santhnalakshmi, sister in law of AIADMK General Secretary VK Sasikala, passed away at Thursday from a cardiac arrest.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்