மணப்பாறையில் மாணவர்கள் மது அருந்தி சீருடையில் போதையுடன் கிடந்த அவலம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணப்பாறை: மணப்பாறை அருகில் உள்ள கோவில்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மூலை முடுக்கெலாம் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்து வைத்து நடத்துகிறது. இதனால், அந்தக் கடைகளைச் சுற்றியுள்ள ஊர்களில் குடித்துப் பழக்கம் இல்லாதவர்கள் கூட, 'கடை அருகில் இருக்கிறதே, குடித்துத்தான் பார்ப்போம்' என்கிற எண்ணத்தில் குடிக்க ஆரம்பித்தார்கள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் குடிகாரர்கள் பெருக, அரசே பண்டிகை நாட்களில் இத்தனை கோடி வசூல் ஆக வேண்டும் என டார்கெட் வைத்து விற்றது.

அதன் விளைவாக முன்பு 17 வயதில் முதன்முதலாக குடிக்க பழகியவர்கள், 13 வயதிலேயே குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படித்தான் மணப்பாறை அருகில் உள்ள கோவில்பட்டியை அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் வகுப்பறையை 'கட்' அடித்து வெளியே வந்து மது அருந்திவிட்டு, யூனிபார்முடன் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்துள்ளனர்.

இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் அவர்களை ஷேர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்று அவர்களது பெற்றோரீடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Near Manappari, in Kovilpatti school students drunk liquor and laid in bus stand with uniform and this made everyone very shock.
Please Wait while comments are loading...