For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதவாத கட்சி என்பதா? நடிகர் கருணாஸுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

நடிகர் கருணாஸ் பேச்சுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சியான எஸ்டிபிஐ கட்சியை இஸ்லாமிய மதவாதக் கட்சி என்று தெரிவித்தார். இதற்கு அந்த கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் ரெத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.டி.பி.ஐ கட்சியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும், அடித்தட்டு மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது.

sdpi strongly Condemns on karunas

ஜல்லிக்கட்டுப்பிரச்சனை, காவிரி மற்றும் முல்லை பெரியார் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம், மீத்தேன் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, மதுவிலக்கு கோரி தொடர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தமிழகத்தின் வாழ்வுரிமைக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

மேலும் நீதி, நியாயங்களுக்கு அப்பாற்பட்டு மத வெறியையோ, இனவெறியையோ தூண்டுகின்ற எந்த ஒரு போராட்டத்தையும் எஸ்.டி.பி.ஐ கட்சி கையிலெடுத்ததில்லை. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் சாதி,மதம்,இனம்,மொழி என பாகுபாடு பாராமல் போராடி வருகிறது.

இந்நிலையில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது எஸ்.டி.பி.ஐ கட்சியை மதவாத கட்சி என குறிப்பிட்டுள்ளார். அவரது இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்.டி.பி.ஐ கட்சியில் என்னைப்போல் பிற சமூகத்தை சார்ந்தவர்கள் கிளை முதல் மாநில அளவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் செயலாற்றி வருகின்றனர்.

கருணாஸ் அவர்கள் தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை வேறு வகையில் கையாள வேண்டும். அதை விடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியை மதவாத கட்சி என ஊடகங்களில் அவர் பேசியுள்ளார். கருணாஸ் அவர்களின் இத்தகைய பேச்சை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் உடனடியாக தமது பேச்சை திரும்ப பெற வேண்டும் எனவும் இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
sdpi party strongly Condemns on AIDMK MLA Karunas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X