For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் அருகே தமிழகம்-ஆந்திரா எல்லையில் 2-வது நாளாக நக்சல் வேட்டை!

By Mathi
Google Oneindia Tamil News

வேலூர்: தமிழகம்- ஆந்திரா எல்லையில் வாணியம்பாடியை அடுத்த தொட்டிகிணறு பகுதியில் இன்று 2-வது நாளாக நக்சலைட்டுகளை தேடும் நடவடிக்கை தொடருகிறது.

தொட்டிகிணறு வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் நடமாடுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாநில போலீசாரும் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

Search Operation lauched by CRPF agains Naxalites at TN-Andhara border

பின்னர் தமிழக எல்லை பகுதிகளான கூடுபள்ளம், அருங்கல்மலை, பெரும்பள்ளம், மல்லகுண்டா உள்ளிட்ட வனப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் ஆந்திர எல்லையான பெரிய அடுகன் மலை, பொக்கல்ரேவ் உள்ளிட்ட வனப்பகுதிகளில் அம்மாநில பதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை 2-வது நாளாக இன்றும் தொடருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

English summary
Tamilnadu- Andhra CRPF personnels conduct search operation against Naxals near Vaniyambadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X