For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்

ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என நாம் தமிழர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: மக்கள் வாக்களித்து முதல்வரான ஜெயலலிதா இறந்துவிட்டதால் மக்களின் மனநிலைக்கு நேர் எதிரான செயல்கள் தற்போது நடந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தரப்பு மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் ரிசார்ட்டிலே ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

seeman has demanded that the Tamil Nadu Legislative Assembly be dissolved

இந்நிலையில்,புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தபட்டு கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டுள்ளது ஜனநாயகத்தையே கேள்விகுறியாக்கியுள்ளது. கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டுள்ள எம்.எல்.ஏக்கள் ஒருமித்த கருத்தோடு இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர்களை அங்கிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதிமுகவில் யாரை பொதுச்செயலாளராக தேர்தெடுக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் உரிமை அதே வேளையில் தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் தற்போது உள்ள நிலையில் மக்கள் வாக்களித்து முதல்வாரன ஜெயலலிதா இறந்துவிட்டதால் மக்களின் மனநிலைக்கு நேர் எதிரான செயல்கள் தற்போது நடந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம். இவ்வாறு சீமான் கூறினார்.

English summary
Naam tamilar chief seeman, has demanded that the Tamil Nadu Legislative Assembly be dissolved
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X