For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாடையைத் தூக்கியபடி 'பாடி' தெரிய செல்பி எடுத்த இளைஞர்!

Google Oneindia Tamil News

சென்னை: சவுதியில் இறந்தவரின் உடலுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர் குறித்து பரபரப்பாக பேசி வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் இறந்தவர் உடல் தாங்கிய பாடையுடன் செல்பி எடுத்து பயமுறுத்தியுள்ளார்.

செல்பி என்பது ஒரு வகையான மன வியாதி என்று கூறி விட்டது ஆய்வு. ஆனாலும் செல்பி எடுக்க விரும்பாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஆளாளுக்கு எடுத்துத் தள்ளுகிறார்கள்.

செல்பி, குருப்பி என்று இது பல பரிணாம வளர்ச்சியையும் பார்த்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஒருவர் இறந்து போன தனது தாத்தாவின் உடலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

selfie of a person with deadbody spreads in Whats app

ஆனால் தமிழகத்தில் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார். இவர் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது இந்த பாடை செல்பி படம்.

ஒருவரின் இறந்த உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பாடையைத் தூக்கிக் கொண்டு போகும் நபர்களில் ஒருவர் கர்ம சிரத்தையாய் ஒரு செல்பி எடுத்துள்ளார். அதில் தனது முகமும் இறந்தவரின் உடலும் தெளிவாகத் தெரியுமாறு அவர் கவனமாக எடுத்துள்ளார்.

செல்போனில் கேமரா வைத்தற்கான அர்த்தத்தையே காலி செய்து விட்டார்களே நம்மவர்கள்.

English summary
A selfie image of a person carring a deadbody, to crematory is spreading in Whats app.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X