For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் 2 ஆண்டுகளில் முடியும்"

Google Oneindia Tamil News

நெல்லை: செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடியும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

நெல்லை தாமிரபரணி ரயில்வே மேம்பால பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில் குமார் கர்க் நெல்லையில் ஆய்வு நடத்தினார்.

ஆற்றை கடந்து சிமெண்ட் பாளங்கள் கொண்டு செல்வது குறித்தும், இடையூறு ஏற்படாத வண்ணம் அவற்றை பொருத்துவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

Sengottai – punalur train service will start in two years

பின்னர் அவர் அளித்த பேட்டியில், "நெல்லையில் பழமை வாய்ந்த தாமிரபரணி மேம்பாலத்தில் இரும்பு பாளங்களை அகற்றி விட்டு சிமெண்ட் பாளங்கள் பொருத்தும் பணி ரூ.10 கோடியில் நடக்கிறது.

இப்பணிகள் மீண்டும் மே 17 ஆம் தேதி துவங்கி அடுத்த 5 வாரங்களுக்குள் நிறைவு பெறும். நான் இந்த பணிகளை தீவிரமாக ஆய்வு செய்தேன். கன்னியாகுமரி முதல் மதுரை வரை மற்றும் மதுரை முதல் தூத்துக்குடி வரையிலான இரட்டை ரயில் பாதைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுளளது.

இந்த பணிகளை தொடங்க ஆய்வு நடந்து வருகிறது. இந்த இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றால் நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் பயண நேரம் 90 நிமிடங்கள் குறையும்.

செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணிகள் அடுத்தாண்டு இறுதிககுள் அல்லது 2017 துவக்கத்தில் முடிவடையும். இந்த பணிகள் முடிவடையும் போது தென்காசியில் இருந்து காலத்திற்கு எளிதாக செல்லலாம்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Sengottai – punalur train service will finish in two years, managers say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X