For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பதில்

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மூன்று வருடங்களாக 'ஆசிரியர் தகுதித் தேர்வை' நடத்தாத அதிமுக அரசு, இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.

Sengottaiyan reply to stalin's Accusation statement about TET exam

கட்டாய கல்வியுரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கிற இந்த நேரத்தில், ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்குப் பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் நலனை கருத்தில்கொண்டே, தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், நீதிமன்ற ஆணையின்படியே தேர்வுக்கான தேதி ஏப். 29, 30 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

English summary
minister Sengottaiyan reply to DMK chief stalin's Accusation statement about TET exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X