For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான்கைந்து அமைச்சர்கள்தான் அதிமுகவா? கோஷ்டிகள் இணைப்பு குறித்து செந்தில் பாலாஜி குமுறல்

இதுவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை குழுவினர் கலந்து பேசவில்லை. எம்.எல்.ஏக்களின் மனநிலை என்ன அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறையும் இல்லை என கூறிய

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நாலைந்து அமைச்சர்கள்தான் அதிமுக கிடையாது, எம்.எல்.ஏக்களிடம், கட்சியின் இணைப்பு குறித்து யாரும் கருத்து கேட்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும், இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் கரூரில் நேற்று இவ்வாறு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவரவிடாமல் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்துவிட்டனர் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார்.

பேச்சுவார்த்தையாம்

பேச்சுவார்த்தையாம்

செந்தில் பாலாஜி கூறுகையில், நாலைந்து அமைச்சர்கள்தான் அதிமுக கட்சியையே நிர்ணயிப்பார்களா? இவர்கள் எப்படி உரிமையை எடுத்துக் கொண்டனர். திங்கள்கிழமை, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பேசுவதாக கூறியுள்ளர்.

நாலைந்து அமைச்சர்கள்

நாலைந்து அமைச்சர்கள்

ஆட்சியைத் தக்கவைப்பது, இரட்டை இலையை மீண்டும் பெறுவது என்ற இரண்டும் இவர்களுக்கு முக்கியம் என கூறியுள்ளனர். ஆனால், இந்த அணியில் குறிப்பிட்ட நான்கைந்து அமைச்சர்கள் தான் பேசுகிறார்கள்.

சசிகலாதான் பொதுச்செயலாளர்

சசிகலாதான் பொதுச்செயலாளர்

இப்போதும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அதிமுகதான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இதற்கு எடப்பாடி கே.பழனிசாமிதான் முதலமைச்சராக உள்ளார்.

மனநிலை

மனநிலை

ஆனாலும் பேச்சுவார்த்தை குறித்து, இதுவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை குழுவினர் கலந்து பேசவில்லை. எம்.எல்.ஏக்களின் மனநிலை என்ன அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறையும் இல்லை.

எதிர்பேச்சு பேசமாட்டார்கள்

எதிர்பேச்சு பேசமாட்டார்கள்

ஆனால், பேச்சுவார்த்தையில் இவர்கள் எதை அறிவித்தாலும் அதிமுக எம்எல்ஏக்கள் அதற்குக் கட்டுப்படுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் எதிர்த்து பேசப்போவது இல்லை. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

English summary
Ex minister Senthil Balaji says AIADMK merger is going to take place with out getting MLAS consent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X