For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபாலி பாதுகாப்புக்குப் போய் படத்தைப் பார்த்து ரசித்துத் திரும்பிய போலீஸ்.. சிவகாசியில்!

Google Oneindia Tamil News

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குப் பாதுகாப்புக்காக சென்ற 15 போலீஸார், ரசிகர்களோடு ரசிகர்களாக உட்கார்ந்து படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த காட்சி செம கலலகலப்பாக இருந்தது.

தமிழகமெங்கும் கபாலி திரையிடப்பட்டுள்ளது. பல இடங்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள், புகார்கள் குவிந்தன. குறிப்பாக முன்கூட்டியே பதிவு செய்து டிக்கெட் வாங்கிய பலர் பல மடங்கு விலை வைத்து தியேட்டர் வளாகங்களில் விற்றதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். அப்பாவி பொதுமக்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

Sivakasi police enjoys Kabali with Rajini fans

இதையடுத்து பல பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்காகவும், கள்ள டிக்கெட்டுகளைப் பிடிக்கவும் குவிக்கப்பட்டனர். அதன்படி,
சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள இரு தியேட்டர்களில் ஜூலை 22ம் தேதி ரசிகர்கள் கட்சி நடைபெற்றது. ரசிகர் மன்றத்தினர் தியேட்டரில் உள்ள அனைத்து டிக்கெட்டுக்களையும் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கிவிட்டனர்.

அதன் பின்னர் ரசிகர் மன்றத்தினர் அந்த டிக்கட்டை கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 15 போலீஸார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் பாதுகாப்புப் பணிக்காக வந்த போலீஸாரை, ரசிகர்கள், வாங்கண்ணே படம் பாருங்கண்ணே என்று அழைத்து உள்ளே உட்கார வைத்து படம் பார்க்க வைத்து விட்டனர். அவர்களும் படத்தை முழுமையாக பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர்.

English summary
A police team which was posted for security enjoyed the Kabali movie with Rajini fans in Sivakasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X