நாங்க எப்பவும் டிடிவி தினகரன் பக்கம்தான் - அடித்துச் சொல்லும் ஆதரவு எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான், அவர் சொல்லும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் எடுத்த முடிவில் எங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக அமைச்சர்கள் இன்று அதிரடியாக அறிவித்துள்ளனர். குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியில் இருக்கக்கூடாது என்பதால் சசிகலா, தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தாடா ஜெயக்குதார்

இந்த முடிவுக்கு அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களின் முழு ஆதரவு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜெயக்குமார் பேட்டி

டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என முதல்வருடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் அணி

இதனையடுத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அவசரம் அவசரமாக அவரது வீட்டிற்கு வந்தனர். எம்எல்ஏக்கள் ஜக்கையன், தங்கத்தமிழ் செல்வன், கதிர்காமு, வெற்றிவேல், செல்வ மோகன்தாஸ், சாத்தூர் சுப்ரமணியன் ஆகிய எம்எல்ஏக்கள் வந்தனர். டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் உடனடியாக தினகரன் வீட்டிற்கு வந்தார்.

தினகரன் பக்கம்தான்

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியை கருத்து கூறிய சாத்தூர் எம்எல்ஏ சுப்ரமணியன், அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதாக கூறினார். டிடிவி தினகரன்தான் எங்களுக்கு எல்லாமே என்று கூறிய அவர், அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.

தங்கத்தமிழ் செல்வன்

இதேபோல ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன், அமைச்சர்கள் எடுத்த முடிவில் எங்களுக்கு விருப்பவில்லை என்றார். அமைச்சர்கள் ஆராயாமல் பேசி வருவதாகவும் கூறினார். இவர் கடந்த பல ஆண்டுகளாகவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இப்போது டிடிவி தினகரனுக்கு ஆதராவாக செயல்படுகிறார்.

ஆட்சிக்கு ஆபத்து

இதே கருத்தைத்தான் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேலும் கூறினார். டிடிவி தினகரன் பக்கம் சில எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Six MLAs including Thanga Tamil Selvan and P. Vetrivel at TTV Dinakaran's residence.
Please Wait while comments are loading...