For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக உள்ளாட்சி தேர்தல்.. இதுவரை 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 42,907 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். புதன்கிழமை மட்டும் 31,726 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 4,748 பேரும், இரண்டாவது நாளில் 6,433 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

So far 42,907 persons have filed their nominations across Tamilnadu.

இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று 31,726 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 334 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 3930 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 26641 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 112 பேரும், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 136 பேரும், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 491 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 42,907 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

English summary
tamilnadu local body election 2016: So far 42,907 persons have filed their nominations across Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X