சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், நாகர்கோவில் - கச்சுகுடா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (வழி: மதுரை,திண்டுகல்,கரூர்,சேலம்,நாமக்கல்) ரயில் எண் 06310: செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

Train

இதேபோல செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் (ரயில் எண் 06309) சென்ட்ரலில் இருந்து காலை 11.15 சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவில் - கச்சேகுடா (வழி:திண்டுகல், கரூர், நாமக்கல், சேலம்,திருப்பதி,ரேணிகுண்டா) ரயில் எண் 06308: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 12-ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1.55 மணிக்கு ஆந்திரம் மாநிலம் கச்சேகுடா சென்றடையும்.

இதேபோல அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் (ரயில் எண் 06307) கச்சேகுடாவில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Southern Railway will run special trains between Chennai and Nagercoil on Sundays from September 29 to November 10.
Please Wait while comments are loading...