தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்- விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? ஓபிஎஸ் கோஷ்டிக்கு வாய்ப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றி அமைக்கப்போவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சசிகலா, தினகரன் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவையும் தம் வசம் கைப்பற்றி வைத்திருக்கிறார் எடப்பாடியார்.

எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்

எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்

அதேநேரத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக எடப்பாடியை மிரட்டும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போடுவதும் லாபியில் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதன் உச்சமாக திடீர் திடீர் என தினகரனை சந்தித்தும் வருகின்றனர்.

எடப்பாடி ஆலோசனை

எடப்பாடி ஆலோசனை

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ளது. இதையடுத்து மூத்த அமைச்சர்களுடன் நேற்று எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?

விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?

அப்போது அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கரை முன்வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரை நீக்கலாம்.

ஓபிஎஸ் கோஷ்டிக்கு வாய்ப்பு

ஓபிஎஸ் கோஷ்டிக்கு வாய்ப்பு

மேலும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டால் இணைப்பு நடவடிக்கை என்பது இன்னமும் எளிதாகிவிடும் என விவாதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்புடனுடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு அமைச்சரவை மாற்ற அறிவிப்பும் வெளியாகலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

Deepa spoke angry | Metro blood bank-Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
TamilNadu Chief Minister Edappadi Palanisamy discussed with Senior Minsiters about cabinet reshuffle.
Please Wait while comments are loading...