For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் தடியடி.. முதல்வரிடம் பேசியுள்ளேன், பிரதமருக்கு தகவல் கொடுத்துள்ளேன்: கமல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: போலீசார் நடத்திய தடியடி குறித்து முதல்வரை தொடர்பு கொண்டு பேசினேன் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியுள்ள கருத்துக்களின் தொகுப்பு இதோ:

ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ள சட்டத்தை உற்று நோக்க காத்திருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்த எது தூண்டியது?

Spoke to the CM of TN, says Kamal Hassan

இந்த கேள்வியை முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டேன். முதல்வர் விரைவில் பதில் அளிப்பார். உரிய வழிகள் மூலமாக, பிரதமருக்கும் நிலைமையை எடுத்து கூறியுள்ளேன்.

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.

வன்முறை பயன் தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.

அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.

உங்கள் உரிமைகளை யாரும் பறித்துவிட முடியாது. அமைதியாக இருங்கள். இந்தியாவின் உயர்ந்த அதிகார பீடம் கவனித்துக் கொண்டுள்ளது. விரைவில் உங்களுக்கு ஆதரவாக பேசும். இவ்வாறு கமல் தெரிவித்தார்.

English summary
None can take away your rights. Pls. stay calm. The highest office in the country is watching & will talk in your favour soon. Maintain calm, says Kamal Hassan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X