For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 11% அதிகரிப்பு... தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2014ம் ஆண்டை விட கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

2015ம் ஆண்டுக்கான குற்ற ஆவணப் புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நேற்று வெளியிட்டது அதன்படி,

Spurt in crime against children in Tamil Nadu: NCRB
  • இந்திய அளவில் 2014ம் ஆண்டு 89,423 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 94,172 ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் 2014ம் ஆண்டு 2,354 குழந்தைகளுக்கு எதிரான வழக்கு பதிவாகி இருந்த நிலையில் 2015ம் ஆண்டு 2,617 வழக்காக அதிகரித்துள்ளது.
  • 2014ம் ஆண்டு 47 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டு 77 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
  • 2014ம் ஆண்டு 395 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள நிலையில், 390 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2015ம் ஆண்டு 403 குழந்தைகள் கடத்தப்பட்டு, 398 வழக்குகள் பதிவாகி உள்ளன.
  • குழந்தைகளை கொலை செய்வது 12 லிருந்து 2 ஆக குறைந்துள்ளது.
  • 2014ம் ஆண்டு ஒரு சிசுக் கொலையும் நடக்காத நிலையில், 2015ம் ஆண்டு 2 சிசுக் கொலைக்கள் நடந்துள்ளன.
  • 2015ம் ஆண்டு 98 குழந்தைகள் கொல்லப்பட்டு 87 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுவே 2014ம் ஆண்டு 119 குழந்தைகள் கொல்லப்பட்டு 103 வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • தமிழ்நாட்டில் சிறுவர்கள் மீதான குற்ற வழக்கு 57 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2014ம் ஆண்டில் 53 ஆக இருந்த சிறுவர்கள் மீதான கொலை வழக்கு 2015ம் ஆண்டு 63 ஆக உயர்ந்துள்ளது.
  • சிறுவர்கள் மீதான கொலை முயற்சி வழக்கு 123 சதவீதம் உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டு 39 ஆக இருந்த இந்த வழக்கு 87 ஆக அதிகரித்துள்ளது.
  • சிறுவர்கள் மீதான ஆள் கடத்தல் வழக்கு கடந்த ஆண்டு 4 ஆக இருந்தது. 2015ல் 19 ஆக உயர்ந்துள்ளது.
  • சிறுவர்கள் கொள்ளை அடித்த வழக்கு 13 லிருந்து 11 ஆக குறைந்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் வழிபறி, வீட்டை உடைத்து திருடுதல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன.
  • சிறுவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட வழக்கு 23 லிருந்து 57 வழக்காக அதிகரித்துள்ளது.
  • சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்பட்ட உயிரிழப்பு வழக்கு 3 மடங்காக அதிகரித்துள்ளது. இது 11 லிருந்து 31 ஆக அதிகரித்துள்ளது.
English summary
The National Crime Records Bureau statistics for the year 2015, released on Tuesday, revealed that the crimes against children in Tamil Nadu registered an increase of 11 per cent when compared to the previous year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X