அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரிலாக்ஸ்... பேரப்பிள்ளைகளுடன் கிரிக்கெட்டை பார்த்து ரசித்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை தனது பேரக் குழந்தைகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆவலாக பார்க்கும் போட்டோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி. கேப்டன் விராத் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Stalin enjoys CT finals with his Grand Sons

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். இதனால் பாகிஸ்தானின் விக்கெட் விழாதா என்று டுவிட்டரில் பிரபலங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பேரப்பிள்ளைகளுடன் கிரிக்கெட் பார்க்கும் போட்டோ பதிவிடப்பட்டிருந்தது. பரபரப்பான அரசியல்களுக்கு மத்தியில் பரபரப்பான கிரிக்கெட் ஆட்டத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் போட்டவை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 695 லைக்குகளையும் 253 ஷேர்களையும் பெற்றுவிட்டது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Stalin watching Champions trophy finals with his grand son and daughters photo posted on twitter
Please Wait while comments are loading...