பணபேர வீடியோ சிடி... சபாநாயகரிடம் ஆதாரம் வழங்கினார் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா அணி கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக எம்எல்ஏ சரவணன் கூறும் வீடியோ ஆதாரத்தை, சபாநாயகர் தனபாலிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தனர் என்று பேசியதாக ஒரு வீடியோ ஆங்கில தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. இதனை மையமாக வைத்து சட்டசபையில் எதிர்கட்சியினர் 3 நாட்களாக புயலை கிளப்பி வருகின்றனர்.

பண பேர விவகாரம்

பண பேர விவகாரம்

அதிமுகவில் இப்போது பல அணிகள் உள்ளன. சட்டசபை நடைபெறும் இந்த நேரத்தில் எதிர்கட்சியினர் சபையை முடக்கும் வகையில் அருமையான ஒரு விசயம் சிக்கியுள்ளது. அதுதான் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தனர் என்று பேசியதாக ஒரு வீடியோ ஆங்கில தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது.

சட்டசபையில் புயல்

சட்டசபையில் புயல்

இந்த சம்பவம் சட்டசபையில் 3 நாட்களாக புயலை கிளப்பி வருகிறது. ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து சட்டசபையில் விவாதம் நடத்த முடியாது என்று சபாநாயகர் கூறிவிட்டார். எல்லாவற்றையும் பதிவு செய்ய இது பத்திர பதிவு அலுவலகம் அல்ல என்றும் கூறினார்.

சிடி ஆதாரம்

சிடி ஆதாரம்

ஆதாரம் இருந்தால் சட்டசபையில் விவாதிக்கலாம் என்றும் சபாநாயகர் கூறினார். இதனையடுத்து சிடி ஆதாரத்தை கொண்டு வந்தார் ஸ்டாலின். அதை ஏற்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

ஆதாரம் வழங்கிய ஸ்டாலின்

ஆதாரம் வழங்கிய ஸ்டாலின்

இந்த நிலையில் பிற்பகல் நேரத்தில் சிடி ஆதாரத்தை சபாநாயகர் தனபாலிடம் அவரது அறைக்கு சென்று வழங்கினார்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
DMK opposition leader M K Stalin has handed over the video evidence against Sasikala group to the Assembly speaker.
Please Wait while comments are loading...