For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதா தற்கொலைக்கு கையாலாகாத குதிரை பேர அரசே காரணம் - ஸ்டாலின்

அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு குதிரை பேர அரசுகளே காரணம் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மாணவியின் அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், இதற்கு காரணம் குதிரை பேர அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டியயுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா, மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.

Stalin slams Centre and State govts for Anitha's death

அனிதாவின் தற்கொலைக்கு காரணம் மத்திய மாநில அரசுகளே என்று அரசியல் கட்சியினரும், எதிர்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.

Recommended Video

    இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ

    மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் பெற்றும் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனிதாவிற்கு மரணத்திற்கு திமுக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

    மாணவர்கள் யாரும் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். இது அரசே இல்லை. இந்த அரசிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.

    அனிதாவின் மரணத்திற்கு கையாலாகாத குதிரை பேர அரசுகளே காரணம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    English summary
    Opposition leader M K Stalin has blasted the centre and the state governments for the pathetic end of poor student Anitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X