விருதுநகர் அருகே வீட்டில் டி.வி. வெடித்து 6-ம் வகுப்பு மாணவன் பலி

விருதுநகர் அருகே வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து 6ம் வகுப்பு மணவர் தயாநிதி என்பவர் உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் 6-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரியை அடுத்த சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் தயாநிதி 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

Student dies in blast

இந்தநிலையில் இன்று இரவு தயாநிதி வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தொலைக்காட்சிப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் மாணவன் தயாநிதியின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு உடல் முழுவதும் பரவியது. மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இதில் சிறுவன் தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
tv blast one student died at virudhunagar
Please Wait while comments are loading...