காவிரி டெல்டாவை விட்டு ஓஎன்ஜிசியே ஓடு... நாகையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகை: காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி தனது பணிகளை நிறுத்த வலியுறுத்தி நாகையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பூமியில் புதைக்கப்பட்ட குழாயில் இருந்து திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

Students of Nagai college boycotted class

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவான இந்த திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்களும் சுற்றுப்புற பகுதி மக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலம் உட்பட காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்தவும், விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை கைவிடவும் கோரிக்கை விடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Hunger Strike Against ONGC in Kathiramangalam-Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Students of Bharathidasan University today engaged in class boycotting protest supporting Kathiramangalam people.
Please Wait while comments are loading...