For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ்டர் சூரியன்.. கொஞ்சம் லேசாத்தான் சுடுங்களேன்??.. முடியாது, 100 டிகிரி கன்பார்ம்!!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இப்போதே 5 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "கடந்த சில நாட்களாக நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வெயிலூர் ஆன வேலூர்

வெயிலூர் ஆன வேலூர்

நேற்று அதிகபட்சமாக சேலம், வேலூரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சியில் 101 டிகிரி வெயில் கொளுத்தியது.

மதுரையில் மண்டை எரியுதே

மதுரையில் மண்டை எரியுதே

மதுரை மற்றும் கரூர் பரமத்தியில் 100 டிகிரி வெயில் பதிவானது.

அது கிடக்கு இன்னும் ஒன்றரை மாசம்

அது கிடக்கு இன்னும் ஒன்றரை மாசம்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இன்னும் 1.5 மாதம் உள்ள நிலையில் இப்போதே 5 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

பேசாம கோவைக்கு ஓடிரலாமா?

பேசாம கோவைக்கு ஓடிரலாமா?

சென்னை, கோவை, பாளையங்கோட்டையில் 98 டிகிரி வெயில் பதிவானது.

வறண்ட வானிலையே...

வறண்ட வானிலையே...

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

அடடே.. சென்னையில் மேகமூட்டம்

அடடே.. சென்னையில் மேகமூட்டம்

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Tamil Nadu districts burning with 100 degree and more and more sun heat nowadays before the summer starts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X