For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித விலங்குகளால் சிதைக்கப்பட்ட சுனிதா கிருஷ்ணனுக்கு மதுரா விருது!

Google Oneindia Tamil News

Sunith Krishnan honored with Mathura Maamanithar award
சென்னை: மதுரா நிறுவன அதிபர் வீ.கே.டி. பாலன் வருடா வருடம் வழங்கி வரும் மதுரா விருந்து இந்த முறை சுனிதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மதுரா மாமானிதர் விருது என்ற இந்த விருதானது, மனிதநேயச் சேவை செய்வோரில் சிறந்த ஒருவருக்கு வருடா வருடம் ஒரு லட்சரூபாய் பண முடிப்புடன் வழங்கப்படுகிறது.

இதற்கு முன்பு, ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, கெளசல்யா, நோவா, நாராயணன் கிருஷ்ணா ஆகியோர் இதைப் பெற்றுள்ளனர்.

சுனிதா கிருஷ்ணனின் வாழ்க்கை மிகுந்த போராட்டமயமானது. தனது 8 வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தந்தவர், தனது 12 வயதில் ஒரு பள்ளியை நடத்தியவர், 15 வயதில் தலித் சமூகத்திற்கான கல்வி இயக்கத்தைத் தொடங்கியவர், அந்த காலகட்டத்தில் மனித விலங்குகள் எட்டுபேரால் சிதைக்கப்பட்டவர் சுனிதா கிருஷ்ணன்.

10,000 பாலியல் தொழிலாளர்களை மீட்டு புது வாழ்வளித்த சுனிதா கிருஷ்ணனை நூறு முறை கொலை செய்ய முயன்றார்கள் விபச்சார ரவுடிகள். "நான் மீட்டெடுத்த குழந்தைகளின் புன்னகைக்காக வாழ்கிறேன், அவர்களது கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசிப்பதைக் காண்பதற்காக நான் வாழ்கிறேன்'' என்று கூறுகிறார் சுனிதா கிருஷ்ணன்.

சுனிதாவின் வாழ்க்கை, போராட்டம் குறித்து அவரது வாயாலேயே அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:

English summary
Social worker Sunith Krishnan has been honored with Mathura Maamanithar award
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X