For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தி சேனல்களை பின் தள்ளி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது சன் டி.வி.!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியத் தொலைக்காட்சிகளில் சன் டிவி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. சன்டிவியை கடந்த அக்டோபர் 10 முதல் 16ம் தேதி வரை 10 லட்சத்து 92ஆயிரத்து 231 பேர் பார்த்துள்ளதாக தி ப்ராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்டார் ப்ளஸ். ஜீ சேனல்கள், என பல இந்தி சேனல்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ் சேனலான சன் டிவி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இத்தனைக்கும் சன்டிவியில் சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறது. ஞாயிறுகிழமைகளில் மட்டும்தான் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

கடந்த அக்டோபர் 10 முதல் 16 வரை பிஏஆர்சி நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் ஸ்டார் ப்ளஸ் சேனலை 804214 பேர் ரசித்துள்ளனர். கலர்ஸ் சேனலை 708747 பேர் ரசித்துள்ளனர். ஜீ சேனலை 609189 பேர் ரசித்துள்ளனர்.

சன் டிவி நம்பர் 1

சன் டிவி நம்பர் 1

சன் டிவியை இந்தியா முழுவதும் உள்ள 1092231 மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். சன்டிவியின் டிஆர்பியின் இப்படி உயர காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர் பிற டிவி சேனல்காரர்கள்.

அழுகாச்சி சீரியல்கள்

அழுகாச்சி சீரியல்கள்

சன்டிவியில் காலை 10 மணிக்கு சினிமா செய்திகள், 10.30 மணிக்கு சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. காலை 11 மணி தொடங்கி இரவு 11 மணி வரை 18 சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அபூர்வராகங்கள் தொடங்கி அழகி வரை சீரியல்களை பார்த்து அழுதுகொண்டுதான் இருக்கின்றனர் இல்லத்தரசிகள்.

விளம்பர வருமானம்

விளம்பர வருமானம்

சன்டிவி நம்பர் 1 இடத்தைப் பிடித்திருப்பதால் இனி விளம்பர வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது பங்குகளும் மளமளவென உயரும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

விளையாட்டுச் சேனல்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளது. செய்திச் சேனல் களில் டைம்ஸ் நவ் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளர்.

பிற மாநில சேனல்கள்

பிற மாநில சேனல்கள்

தெலுங்கு சேனலில் ஈடிவியும், கன்னடத்தில் கலர்ஸ் கன்னடாவும், மலையாளத்தில் ஏசியா நெட் சேனலும் முதலிடத்தில் உள்ளன. மூவிஸ் நவ் முதலிடத்தில் உள்ளது.

English summary
Sun TV with 1092231 Rat (000s) topped the Tamil GEC genre. It also becomes the No 1 channel on All India basis ahead of Star Plus and Colors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X