For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதாவது, சாமி போட வரும் "பிட்டு" என்னன்னா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட வேண்டும். பாஜக, தேமுதிகவுடன் இணைந்து திமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியிருப்பது அனைத்துக் கட்சிகளையும் குழப்பத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

சாமியின் இந்த ஆசை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கேள்விகளை தூண்டி விட்டுள்ளது. அதை விட முக்கியமாக, பாஜகவுடன் திமுக எப்படி கூட்டணி அமைக்க முன்வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சாமி மூலமாக பாஜக தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளதா அல்லது திமுகவை அது மறைமுகமாக மிரட்டிப் பார்க்கிறதா என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

அதேசமயம், தமிழக அரசியலின் எதார்த்த நிலையைவைத்துப் பார்த்தால் சாமி வெளிப்படுத்தியிருப்பது ஆசை அல்ல.. மாறாக விஜயகாந்த் வேறு பக்கம் போய் விடாமல் தடுக்க போடப்படும் ஆப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சாமியின் டிவீட்

சாமியின் டிவீட்

சுப்பிரமணியம் சாமி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி விலகி மு.க.ஸ்டாலினை அந்த இடத்திற்கு அறிவிப்பார் என நான் எதிர்பார்கிறேன். மேலும் பாஜகவும், தேமுதிகவும் இணைந்து திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக - பாஜக குழப்பம்

திமுக - பாஜக குழப்பம்

சாமியின் இந்த டிவீட் திமுகவிலும், தமிழக பாஜகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமி ஏதாவது பேசுகிறார், செய்கிறார் என்றால் நிச்சயம் மேலிடத்திற்குத் தெரியாமல் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அவரது டிவீட்டுக்கு உள்ளர்த்தம் என்ன என்ற ஆராய்ச்சியில் பலரும் இறங்கியுள்ளனர்.

இதுவரை சிந்திக்கவே இல்லை

இதுவரை சிந்திக்கவே இல்லை

இதுகுறித்து திமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் கூறுகையில் இப்படி ஒரு கூட்டணி குறித்து இரு தரப்பிலுமே யாருமே சந்திக்கவில்லை, சிந்திக்கவும் இல்லை என்று கூறுகின்றனர்.

விஜயகாந்துக்காக மல்லுக்கட்டு

விஜயகாந்துக்காக மல்லுக்கட்டு

ஜல்லிக்கட்டைக் கூட மறந்து விட்டு திமுகவும், பாஜகவும், விஜயகாந்த்தின் தேமுதிகவை அடக்க கடுமையாக மல்லுக்கட்டி வருகின்றன. இதில் யாருக்கு வெற்றி என்பதும் இதுவரை தெளிவாக இல்லாத நிலை.

ஏன் சாமி இப்படிச் சொன்னீங்க??

ஏன் சாமி இப்படிச் சொன்னீங்க??

இந்த நிலையில் புதிதாக ஒரு டிவீட்டைப் போட்டு சாமி குட்டையைக் குழப்பியுள்ளதால் இரு தரப்பிலும் ரகசியமாக ஏதாவது நடக்கிறதோ என்ற சந்தேகம், எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

கருணாநிதிதான் முதல்வர்

கருணாநிதிதான் முதல்வர்

திமுகவைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக இதுவரை அறிவிக்கவில்லை. ஸ்டாலின்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார் என்றாலும் கூட கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என்றுதான் திமுகவில் அனைவரும் கூறி வருகின்றனர் - ஸ்டாலின் உள்பட.

பிறகு ஏன் இப்படி?

பிறகு ஏன் இப்படி?

இந்த நிலையில் தான் சாமியின் டிவீட் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாஜக ஏதாவது செய்தியை திமுகவுக்கு "பாஸ்" செய்ய முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

2ஜி விவகாரம்

2ஜி விவகாரம்

திமுக தற்போது 2ஜி சிக்கலிலிருந்து இன்னும் மீளவில்லை. கனிமொழி, ராசா மீதான வழக்கு உச்சத்தை எட்டியுள்ளது. அந்தச் சிக்கலிலிருந்து திமுகவைக் காப்பாற்ற பாஜக முயற்சிக்கிறதோ, அப்படிச் செய்து திமுக கூட்டணியை ஏற்படுத்த முயல்கிறதோ என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

இப்படி கூட்டணி அமையலாமோ?

இப்படி கூட்டணி அமையலாமோ?

ஒருவேளை அந்த ரீதியில் ஏதாவது முயற்சிகள் நடப்பதாக இருந்தால், திமுக, பாஜக, தேமுதிக இணைந்து கூட்டணி அமைக்கலாம். ஆனால் இதெல்லாம் நடக்குமா, சரிப்பட்டு வருமா என்பதுதான் கோடி ரூபாய் கேள்வியாகும்!

இப்படித்தான் நடக்கப் போகிறது

இப்படித்தான் நடக்கப் போகிறது

தேமுதிக தலைவர் விஜய்காந்த்தைப் பொறுத்தவரை இந்த முறை ரிஸ்க் எடுக்க அவர் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. டெல்லிக்குப் போய் அமீத் ஷாவை அவர் சந்தித்துப் பேசினாலும் கூட அவர் மக்கள் நலக் கூட்டணி பக்கம் போகவே முடிவு செயவார் என்று சொல்லப்படுகிறது.

இங்குதான்

இங்குதான் "சாமி"யாட்டம்!

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள யாரையுமே சாமிக்கு ஆகாது. வைகோ, கம்யூனிஸ்ட்டுகள் அவருக்கு ஆகவே ஆகாது. எனவேதான் இந்தக் கூட்டத்தோடு விஜயகாந்த் சேர்ந்து விடாமல் தடுக்க சாமி முயற்சிப்பதாக தெரிகிறது. இவர்கள் யாரும் விஜயகாந்த்தால் ஆதாயம் அடைந்து விடக் கூடாது என்பதால்தான் இந்த டிவீட் மூலம் சாமி குழப்பம் ஏற்படுத்த முயல்வதாக கருதப்படுகிறது.

இவங்க சேரட்டும்...!

இவங்க சேரட்டும்...!

அதேசமயம், பாஜக, அதிமுகவோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்தால்தான் உண்மையிலேயே சாமிக்கு உள்ளூர மகிழ்ச்சி ஏற்படும். இதுதான் அவரது உள்மனக் கிடக்கையும் கூட. ஆனால் அது சாத்தியமில்லை, வாய்ப்பும் இல்லை. காரணம் தெளிவானது. எனவேதான் ஜெயலலிதாவைத் தூக்கி விட்டு அந்த இடத்தில் திமுகவை உட்கார வைக்கிறார் சாமி.

அப்படிக் குழப்பி இப்படி திருப்பி

அப்படிக் குழப்பி இப்படி திருப்பி

எனவே, விஜயகாந்த் தெரிந்தோ, தெரியாமலோ, மக்கள் நலக் கூட்டணிக்குப் போய் விடக் கூடாது. பாஜகவை விட்டுவிட்டு தனியாக திமுக பக்கமும் போய் விடக் கூடாது.. இதுதான் சாமியின் "ஒரிஜினல்" ஐடியா என்கிறார்கள். பாஜகவுக்கு சாதகமாக விஜயகாந்த் முடிவெடுக்காமல் போனால் பாஜகவுக்கு பெரும் பாதகம் வந்து விடாமல் தடுக்கவே, ஸ்டாலின் முதல்வர், பாஜக, தேமுதிக, திமுக கூட்டணி என்று "பிட்"டைப் போட்டுள்ளார் சாமி என்கிறார்கள்.

இப்போதைக்கு இப்படி இருக்கலாம்

இப்போதைக்கு இப்படி இருக்கலாம்

இப்போதைக்கு விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்குப் போகவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. கூடவே ஜி.கே.வாசனும் வரலாம். இதைக் குழப்பத்தான் சாமி டிவிட்டர் மூலம் களம் இறங்கி குழப்ப ஆரம்பித்துள்ளார். விஜய்காந்த் மக்கள் நலக் கூட்டணி பக்கம் போய்விட்டால், அடுத்ததாக பாஜக- பாமக கூட்டணி அமைக்கலாமே என்று சாமி அடுத்த ட்வீட் போடலாம். காரணம், பாமகவும் இல்லாவிட்டால் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் திக் பிரமை தேர்தலாகவே இருக்கும்.. சோ ஓட்டை மட்டும் நம்பியா தேர்தலை சந்திக்க முடியும்?!

2ஜி திமுக தான் ஹேப்பி அண்ணாச்சி

2ஜி திமுக தான் ஹேப்பி அண்ணாச்சி

மொத்தத்தில் இந்த குழப்பத்தில் திமுக தான் ஹேப்பி அண்ணாச்சி.. தங்களை இதுவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத பாஜகவில் இருந்து கூட்டணி அமைக்கலாமே என்று ஒரு சமிக்ஞை வந்துள்ளதை பார்த்து 2ஜி திமுக எப்படி மகிழாமல் இருக்க முடியும். அதிலும் ஸ்டாலின் தரப்புக்கு இது இன்னும் மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம், கருணாநிதி அவர்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள்.. ஸ்டாலின் முதல்வராகட்டும் என்று பாஜக தரப்பிலிருந்தே ஒரு ட்வீட் வந்துள்ளதே. இதை காங்கிரஸ் கூட செய்தது இல்லையே..
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய ட்வீட்கள் வரும்...!

English summary
Senior BJP leader Subramanian Swamy's Tweet has created surprise among the cadres of both DMK and the BJP. Giving a new twist to his party’s efforts in seeking potential alliance partners for the upcoming Assembly election, Swamy said in a tweet,”I am hopeful MK will decline to be CM candidate and make Stalin leader.” He also said, “Then hope BJP align Stalin and Vijaykanth (DMDK chief) in a new alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X