ஜிஎஸ்டி போட்டு ஆனந்தபவனை கையேந்தி பவனாக மாற்றிய மோடி.. டி.ராஜேந்தர் சுளிர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து சென்னையில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் டி. ராஜேந்தர் தலைமை தாங்கி பேசினார். அப்போது, சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வரிக்கே போய்விடுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

வருமானவரி முதல் ஜிஎஸ்டி வரி என அனைத்து வரிகளையும் போட்டு இந்தியர்களை ஒரு வரிக்குதிரையாக மாற்றிவிட்டார் மோடி என்று ராஜேந்தர் குற்றம்சாட்டினார். மன்னர் ஆட்சியில் கூட இல்லாத வரி மக்களாட்சியில் விதிக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

வரி, வரி என மக்களுக்கு வலியைத்தான் கொடுப்பீர்களா என்றும் ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி ஆட்சி இந்தியாவில் வந்தால் ஆனந்தபவனாக இருக்கும் என நினைத்தால் கையேந்தி பவனாக மாறிவிட்டது என்றும் டி. ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

GST will impact on Students | Oneindia News

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
T. Rajendar stage a protest against GST at Chennai Collectorate today.
Please Wait while comments are loading...