For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் யார், யாருக்கு இடம்? இறுதி செய்தார் டி.டி.வி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கிறார். பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

T.T.V.Dinakaran discus with party seniors about new cabinet

இந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய அமைச்சரவையில் ஓ. பன்னீர் செல்வம் , மாஃபா பாண்டியராஜன் தவிர ஏற்கனவே இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் இடம் பெறுவர் என தெரிகிறது. செங்கோட்டையனும் அமைச்சரவையில் இணையலாம். இவர்களுக்கு என்னென்ன துறைகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

English summary
T.T.V.Dinakaran made discussion with party seniors about new cabinet formation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X