மாதவன் திடீர் பொங்கலுக்கு பின்னணியில் டி.டி.வி. தினகரன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியபடி தான் நடந்துகொள்ளவில்லை என கூறியுள்ளார் தீபாவின் கணவர் மாதவன்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சமீபத்தில் ஒரு அமைப்பை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

T.T.V.Dinakaran is behind Madavan move?

இந்த நிலையில் அவரின் கணவர் மாதவன், இன்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு தான் புதிய கட்சி தொடங்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

தீபாவுக்கு எதிராக மாதவனை திருப்பியது டிடிவி தினகரன் என்ற பேச்சு உள்ளது. இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தினகரனை நீங்கள் ரகசியமாக சந்தித்தீர்களாமே என்ற கேள்விக்கு, இதுவரை யாரையும் அப்படி சந்திக்கவில்லை என்றார் மாதவன்.

ஜெயா பேரவையில் இருந்து அதிமுகவுக்கே பலரும் வந்து சேருவார்கள் என தினகரன் கூறியிருந்தார். அதன் ஒருபகுதிதான் உங்கள் நடவடிக்கையா என நிருபர்கள் கேட்டதற்கு, நான் சேரவில்லை. தனித்து செயல்பட உள்ளேன் என்று மாதவன் பதிலளித்தார்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
T.T.V.Dinakaran is behind Madavan move as he stand against his wife Deepa.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்