பெரா வழக்கில் தண்டனை பெற்ற தினகரன் தேர்தலில் போட்டியிடுவதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தார்மீக ரீதியாக சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டி.டி.வி.தினகரனின் வங்கி கணக்குக்கு கடந்த 1995, 1996ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.

[Read This: டிடிவி தினகரன் சொத்துக்கள் இன்னமும் பறிமுதல் செய்யப் படாதது ஏன்? ]

இதையடுத்து இவர் மீது 1996ல் அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரூ.25 கோடி அபராதம்

இந்த வழக்கு குறித்து, அவரிடம் மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தும், உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் ரூ.25 கோடி அபராத தொகை நிர்ணயித்தது சரிதான் என முடிவு செய்து உத்தரவிட்டனர்.

ஹைகோர்ட்டில் முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட்டில் தினகரன் மேல்முறையீடு செய்தார். விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தினகரன் மனுவை டிஸ்மிஸ் செய்ததோடு, ரூ.28 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இப்படி தண்டனை பெற்ற குற்றவாளியான டி.டி.வி.தினகரன்

தண்டனை குற்றவாளி

தண்டனை குற்றவாளியான தினகரன், ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளார். அடுத்ததாக முதல்வர் பதவிக்கும் காய் நகர்த்துவார் என்பதே எதிர்பார்ப்பு. தேர்தலில் போட்டியிட சட்டம் இடம் கொடுத்தாலும், தார்மீக ரீதியாக இப்படி ஒரு முடிவை எடுக்க தினகரன் எப்படி துணிந்தார் என்பதே கேள்விக்குறி.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
T.T.V.Dinakaran who is contesting in R.K.Nagar constituency is a convicted accused in FERA violation case.
Please Wait while comments are loading...