For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரீல் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்கள்.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர்கள்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. அலங்காநல்லூரில் தொடர்ந்து 2வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். விகடன் விருது விழாவில் பேசிய ரஜினி, ஜல்லிக்கட்டுக்கு எத்தகைய விதிமுறைகளை வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்றார். ஆனால் தமிழ் கலாச்சாரம் காக்கப்பட ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு என்று கூறாதீர்கள் ஏறுதழுவுதல் என்று கூறுங்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். காளைகளை தழுவுகிறோமே தவிர அவற்றை காயப்படுத்துவது இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட், 'ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪#WeNeedJallikattu'என குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு

சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதலில் அறிக்கை வெளியிட்டவர் நடிகர் சிம்பு தான். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவிதமாக மவுன போராட்டத்தை நடத்தி இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டு குறித்து எழுச்சியை ஏற்படுத்தினார் சிம்பு.

விஜய்

விஜய்

விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களோட கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்காக அல்ல. தமிழனுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு.எதையும் எதிர்பார்க்காம, யாருடைய தூண்டுதலும் இல்லாம எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்திருக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

சூர்யா

சூர்யா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சூர்யா தனது ட்விட்டரில், ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி, பொதுப்பிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கார்த்தி

கார்த்தி

நம் கலாச்சார அடையாளம் மீட்க போராடிக்கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகள் சரித்திர வெற்றி பெற என் ஆதரவும் வாழ்த்துக்களும் என நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #JusticeForJallikattu

 ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள ஜி.வி.பிரகாஷ், எங்கள் வீரம் எங்கள் தாயின் கருவறையிலேயே விதைக்கப்பட்டதடா தமிழா என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சேலம் அருகே ஆத்தூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இன்று அவர் பங்கேற்றார்.

 தனுஷ்

தனுஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் தனுஷும் தனது ஆதரவை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதில், "ஜல்லிக்கட்டுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் ஆதரவு அளிக்க ஒன்று கூடிய ஒவ்வொரு தமிழர்களுக்காகவும் பெருமைப்படுகிறேன். வெற்றி நிச்சயம்" என குறிப்பிட்டுள்ளார். நடிகர் விக்ரமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் இந்த ஏகோபித்த ஆதரவு இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்களில், அஜித் இன்னும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil actors rajinikanth, kamalhassan, surya, simbu and others has expressed his support for Jallikattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X