For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் அமைப்பு டிசம்பர் 15 ஆம் தேதியன்று மறியல் போராட்டம்

Google Oneindia Tamil News

கடலூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் அமைப்பின் சார்பிலான கோரிக்கைகளை முன்வைத்து வரும் டிசம்பர் 15 ஆம் தேதியன்று மறியல் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில், " சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளான ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம், குடும்ப பாதுகாப்பு மற்றும் அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம், பணி ஓய்வு கால பணப்பயனை ரூபாய் 5 லட்சமாக உயர்த்துதல், விலைவாசி உயர்விற்கேற்ப உணவூட்டு செலவினத்தை உயர்த்துதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் ஆகியவை குறித்து தமிழக அரசு அக்டோபர் 10 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது.

கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும் இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு உடையணிந்து மறியல் போராட்டம் நடத்துவது,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பது" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
Tamil Nadu Nutritional organizer society will plan to protest against the government on December 15th for some of the requests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X