For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்னிந்தியாவில் தமிழக போலீஸுக்குதான் ரொம்ப கம்மி சம்பளம்... அள்ளி கொடுக்குது தெலுங்கானா

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தென்னிந்தியாவில் தமிழக போலீசாருக்குத்தான் மிக குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில்தான் போலீசாருக்கு மிக அதிகமானமான ஊதியம் கிடைக்கிறது.

நாட்டின் போலீஸ் துறை தொடர்பான ஆய்வு நிறுவனம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்தியாவில் அதிகமாக தெலுங்கானாவிலும் இதற்கடுத்ததாக கர்நாடகா, ஆந்திராவிலும் போலீசாருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

கான்ஸ்டபிள் சம்பளம்

கான்ஸ்டபிள் சம்பளம்

ஆனால் தமிழகத்தில்தான் மிகக் குறைவான ஊதியம் போலீசாருக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது தெலுங்கானாவில் கான்ஸ்டபிள் ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ16,400. ஆனால் தமிழகத்தில் ஒரு கான்ஸ்டபிளின் அடிப்படை சம்பளம் ரூ5,200. 2 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் மொத்தமே ரூ18,000 சம்பளம்தான் கான்ஸ்டபிளுக்கு கிடைக்கிறது.

ஹெட்கான்ஸ்டபிள் சம்பளம்

ஹெட்கான்ஸ்டபிள் சம்பளம்

தெலுங்கானாவில் ஹெட்கான்ஸ்டபிளுக்கு ரூ21,230-ல் இருந்து ரூ63,010 வரை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் ரூ5,200-ல் இருந்து ரூ20,200வரைதான் கிடைக்கிறது.

சப் இன்ஸ்பெக்டர்

சப் இன்ஸ்பெக்டர்

சப் இன்ஸ்பெக்டருக்கு தெலுங்கானாவில் சம்பளம் ரூ28,940 ரூபாய். ஆனால் தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டரின் சம்பளமே 9,300 ரூபாய் மட்டும்தான் கிடைக்கும்.

டிஎஸ்பிக்களுக்கு..

டிஎஸ்பிக்களுக்கு..

தெலுங்கானா டி.எஸ்.பிகளுக்கு ரூ40,270 முதல் 93,780 வரை சம்பளம் கிடைக்கிறது. தமிழகத்தில் டிஎஸ்பிகளுக்கு ரூ 15,600 முதல் ரூ39,100 வரைதான் கிடைக்கிறது.

இப்படி குறைவான ஊதியம், அதிகப்படியான வேலைப்பளு இருப்பதால்தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு போலீஸ் பயிற்சிக்கு சேர்ந்த இளைஞர்கள் 11,000 பேரில் 2674 பேர் விலகிவிட்டதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
From constables to deputy superintendents of police, they are among the lowest paid in the South India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X