For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்கள் மோதல் எதிரொலி- அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரிக்கை!

Google Oneindia Tamil News

நெல்லை : தமிழகத்தில் பல பள்ளிகளில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றன. இதணால் அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த பெற்றோர்களும், தலைமை ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tamil Nadu Schools hereafter under control Surveillance Cameras

குறிப்பாக பல அரசு பள்ளிகளில் மோசமான நடத்தை உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் கட்டுபாட்டை மீறி செயல்பட தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் அச்ச நிலையிலேயே பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது.

சக மாணவர்களை தாக்குவது, ஆசிரியர்கள் கூறுவதை கேட்காமல் எதிர்த்து பேசுவது, மிரட்டல் விடுப்பது, ஆயுதங்களால் தாக்குவது, பொருட்களை உடைத்து சேதப்படுத்துவது, இதில் உச்சகட்டமாக வகுப்பறையில் கொலை நடப்பது கூட சாதாரணமாகி விட்டது. பள்ளியில போதிய கண்காணிப்பு இல்லாததால் செலபோனில் ஆபாச படம் பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு பள்ளியில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும்.

கம்பவுண்ட் சுவர் இல்லாத அரசு பள்ளிகளில் கம்பவுண்ட் சுவரை உடனே கட்ட வேண்டும். பள்ளி அருகே சம்பந்தம் இல்லாத மாணவர்கள், பிற நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
School students were going in a wrong way nowadays. The school going to combine with polices to control the disrespected students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X