For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அபாய நிலையில் நிலத்தடி நீர் – மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரும் மாதம் இருமுறை மட்டுமே வழங்கப்பட்ட வருகிறது. இதனால் குடிநீருக்கு பொது மக்கள் திண்டாடுகிறார்கள்.

சிறப்பு திட்டங்கள்:

சிறப்பு திட்டங்கள்:

இதையடுத்து வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்:

ஆலோசனைக் கூட்டம்:

இது தொடர்பாக தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

மாவட்ட கலெக்டர்கள்:

மாவட்ட கலெக்டர்கள்:

கடந்த 2 நாட்கள் நடந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், தீருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்றனர்.

மே தினம்:

மே தினம்:

இன்று மே தின விடுமுறை என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் எஞ்சிய 8 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்கள்.

குடிநீர் தொகுப்பு திட்டம்:

குடிநீர் தொகுப்பு திட்டம்:

தமிழகத்தில் வறட்சி நிலமையை கருத்தில் கொண்டு ரூபாய் 681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மாவட்ட விவரங்கள்:

மாவட்ட விவரங்கள்:

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக கலெக்டரிகளிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு அறிவிப்புகள்:

சிறப்பு அறிவிப்புகள்:

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Water consumption problem mainly arrived in Tamil Nadu state. Collectors discuss abut to tackle the situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X