பெப்சி ஊழியர்கள் இன்றி ஷூட்டிங்.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெப்சி அமைப்பின் தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்துப் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்-தென்னிந்திய திரை தொழிலாளர் சங்கம் (பெப்சி) இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம்.

Tamil producers decides to go away from pepsi employees

ஆனால் படப்பிடிப்பில் சில பெப்சி சங்க ஊழியர்கள் தன்னிச்சையாக சம்பளம் மற்றும் பேட்டாவை அதிகரித்து தருமாறு நிர்பந்திக்கிறார்கள்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சிலர் புகார் கூறினர்.

இதையடுத்து இந்தப் பிரச்னை பற்றி பேசத் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் நடந்தது.

இதில், பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல், மற்ற தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்புக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கில், எந்த தொழிலாளர்களை வைத்தும் சினிமா படப்பிடிப்பை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை ஆதாரமாக வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

A P J Abdul Kalam Memorial Place-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Tamil producer council decided that it will shoot films with employees from other sources except from the Pepsi.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்