For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானம் காத்த காளைகள்!

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

கும்பல் சேர்ற எல்லா இடத்துலயும் பத்து செகண்ட் பவர் கட்டானா நூறு பொண்ணுங்க மேல கை வச்சுட்றாங்க.

ஊர் ஊரா இப்டி சம்பவம் நடக்கு. படிக்க பாக்க மானமே போகும். இப்படியா அலைவானுக காலிப் பயக என்று மனசு கொதிக்கும்.

மெரினா பீச்ல பல்லாயிர கணக்குல திரண்ட கூட்டத்துல ஏகப்பட்ட பொண்ணுங்களும் அவங்க அம்மாக்களும் இருந்தாங்க.

Tamil youths who save the dignity of women

ராத்திரியும் அங்கயே இருந்தாங்க. அரசாங்கம் லைட்டை எல்லாம் அணச்சிருச்சுனு தெரிஞ்சதும் பகீர்னு ஆயிருச்சு.

ஆனா...

ஒரு அசம்பாவிதம், ஒரு புகார், ஒரு அழுகை இல்லை.
பத்தர மாத்து தங்கம்னு நிரூபிச்சுட்டீங்கடா!

ஜல்லிக்கட்டு போராட்டம் ஜெயிச்சாலும் தோத்தாலும் எனக்கு அது பெருசுல்ல.
இரவா இருந்தாலும் சரி, இருட்டா ஆக்கினாலும் சரி பொண்ணுங்களுக்கு காவலே நாங்கதான்னு காமிச்சீங்கல்ல, அந்த நாகரிகத்துக்கு முன்னாடி, அந்த பண்பாட்டுக்கு முன்னாடி, இந்த உலகமே வெறும் தூசிடா.

உலக மொத்தம்னு சொல்ல முடியாது. ஆனா ஒவ்வொரு ஸ்டேட்ல உள்ள மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உங்க நடத்தை ஒரு பாடமா இருக்கும்னு அடிச்சு சொல்லுவேன்.

ஸ்போர்ட்ஸ்மன்ஷிப் அப்டீனா என்னானு மெட்ராஸ் ரசிகர்கள பாத்து தெரிஞ்சுக்கணும்னு கிரிக்கெட் ஆட்ற நாடுகள்ல சொல்லுவாங்க.

இதே மெரினா பீச்சுக்கு எதிர்ல உள்ள சேப்பாக் ஸ்டேடியத்ல இதே ஜனவரில 19 வருசத்துக்கு முன்ன நடந்தது அந்த டெஸ்ட் மேச். எதிர்பாராத விதமா 4 ரன் குடுத்து 4 விக்கெட் எடுத்து இந்தியாவ ஜெயிச்சுருச்சு பாகிஸ்தான். மொத்த கூட்டமும் ஸ்டன்னாயிர்ச்சு. யாரோ ஒரு ரசிகன் எழுந்து நின்னு கைதட்ட ஆரமிச்சான். அவ்வளவுதான். ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் எழுந்திரிச்சு நின்னு கோரசா கைதட்னாங்க.

அப்ப ஸ்டன் ஆனது பாகிஸ்தான் ப்ளேயர்ஸ். 'வாட், இவங்க நமக்கா கை தட்றாங்க' என்று ஷாக்காகி ஒரு செகண்ட் முழிச்சாங்க. அப்றம் அப்டியே மெர்சலாகி விக்டரி லேப் வந்தாங்க. அவங்க கன்னமெல்லாம் ஆனந்த கண்ணீர். தமிழ்நாட்டு ரசிகனுங்க இவ்ளோ பண்பாடு உள்ளவங்களானு பேச்சிழந்து டீவிய பாத்துகிட்டு இருந்தாங்க உலகம் பூரா இருக்ற கிரிக்கெட் ரசிகர்கள்.

திறமையும் உழைப்பும் சாதனையும் எதிரிக்கு சொந்தமானதாக இருந்தாலும் அதை மதித்து பாராட்டுவது தமிழக மக்களின் பண்பாடு, பாரம்பரியம் என்று எல்லா நாடுகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார்கள். விளையாட்டை விளையாட்டாக ரசிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சென்னை மேட்சை விடியோ போட்டு காட்டுகிறார்கள் கால்பந்து வெறி பிடித்த ஐரோப்பிய நாடுகளில்.

அந்த தமிழ் பண்பாட்டை, பாரம்பரியத்தை மெரினா பீச்சில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு மத்தியிலும் தடம் புரளாமல் காத்து நின்ற தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு ப்ரவுட் சல்யூட்.

We are proud of you, boys.

English summary
Kathir Vel, veteran journalist has praised the dignity of Tamil youngsters those staging mega protest in favour of Jallikkattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X