For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வின் முதல் கையெழுத்தை வரவேற்கிறோம், ஆனால் இன்னும் நிறைய செய்யணும்: தமிழிசை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதை வரவேற்பதாகவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றக் கையோடு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை குறைப்பது, தாலிக்கு தங்கம் என 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Tamilisai appreciates Jaya

500 டாஸ்மாக் கடைகளை மூடுவது மற்றும் கடைகளின் வேலை நேரத்தை குறைத்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது,

விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி,100 யூனிட் மின்சார கட்டணம் ரத்து, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது. தொழில் துறையில் தமிழகம் முன்னேற பல புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

சென்னை தி. நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் சிறப்பு கூட்டத்தில் தமிழிசை கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP state president Tamilisai Soundararajan appreciated Jaya's first moves after taking charge as CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X