For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா' வந்ததும் பாலமெல்லாம் 'பட் பட்' டென்று திறக்குதாம்...!

Google Oneindia Tamil News

சென்னை : நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் மொத்தம் 388 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 ரயில்வே மேம்பாலங்கள், 3 ரயில்வே கீழ்பாலங்கள், 59 பாலங்கள், ஒரு அலுவலகக் கட்டடம் மற்றும் 3 பயணியர் மாளிகைகள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது...

ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிகமுக்கியப் பங்கினை வகிக்கிறது.

Tamilnadu CM Jyalalitha opened New Bridges through vedio conference

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலைக் கட்டமைப்பு வசதியினை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுவதிலும், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதிலும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டம், பாச்சலில் 21 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண். 89-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள 662 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதே போன்று, மேலும் வேலூர் மாவட்டம் - புதூரில் ரயில்வே கடவு எண். 82-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், கோயம்புத்தூர் மாவட்டம் - நஞ்சுண்டாபுரத்தில் ரயில்வே கடவு, எண். 21-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறையில் ரயில்வே கடவு எண். 281-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்

கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலத்தில் ரயில்வே கடவு எண். 168-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், பெண்ணாடத்தில் ரயில்வே கடவு எண். 181-க்கு மாற்றாக

கட்டப்பட்டுள்ள மேம்பாலம், கன்னியாகுமரி மாவட்டம் - புத்தேரியில் ரயில்வே கடவு எண்.

32-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், திருப்பூர் மாவட்டம் - உடுமலைப்பேட்டை டவுனில் ரயில்வே கடவு எண். 95-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்

வேலூர் மாவட்டம் - மேலாளத்தூரில் ரயில்வே கடவு எண். 66-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம், கிருஷ்ணகிரி மாவட்டம் - சாமல்பட்டி ரயில்வே கடவு

எண். 96-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம், கடலூர் மாவட்டம் - திருப்பாதிரிபுலியூரில் ரயில்வே கடவு எண். 159 அருகே கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கீழ்பாலம்

சேலம் மாவட்டம் - பாலமேடு, சின்னக்கரட்டூர், வாழக்கோம்பை, தேனூற்றுவாரி,காட்டம்பட்டி, தாதாபுரம், கோவிந்தாபுரம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், நாமக்கல் மாவட்டம் - சிங்களாந்தபுரம் மற்றும் பழைய பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் - ராம்புரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்;

தருமபுரி மாவட்டம் - அத்தனூர், கிருஷ்ணாபுரம், வள்ளிமதுரை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், நீலகிரி மாவட்டம் - ராப்ராய் எஸ்டேட் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலம், கோயம்புத்தூர் மாவட்டம் - கிச்சாகாத்தூர், ஜெ. கிருஷ்ணாபுரம், குமரன்குன்று, திடல் - பொள்ளாச்சி, பெல்லேபாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தெற்கு பாகனூர், அளுந்தூர், புலியூர், எதுமலை, சனமங்கலம், மகாதேவி, நாகம்பட்டிபள்ளம், முருகூர், சிறுகளப்பூர் (2 எண்ணிக்கை) ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்

1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் என மொத்தம் 387 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ரயில்வே மேம்பாலங்களையும், 3 ரயில்வே கீழ்பாலங்களையும், 59 புதிய பாலங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu CM Jyalalitha opened New Bridges Worth Rs 387.56 Cr through vedio conference From Chennai secratariate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X