மருத்துவக்கல்வி: தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.. ரவிந்திரநாத் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வழங்குவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது என சமூக சமத்துவ மருத்துவ சங்கத் தலைவர் ரவிந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu Government failed to provide medical education to Tamil Nadu students: Ravindranath

இந்நிலையில் இதுகுறித்து சமூக சமத்துவ மருத்துவசங்கத் தலைவர் ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வழங்க தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசு நினைத்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்றும் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Government has failed to provide medical education to Tamil Nadu students, said Ravindranath, chairperson of the Social Equality Association.
Please Wait while comments are loading...