For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பு: 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து... உச்சநீதிமன்றதில் தமிழக அரசு மேல்முறையீடு!

மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான உள் ஒதுக்கீடு 85% அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது..

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு எழுதினார்கள். அதில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் சமச்சீர் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் 'நீட்' தேர்வில் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் மாநில தேர்வாணையம் நடத்திய பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Government go for appeal in 85% reservation in medical admission

அதனால் மாநில அரசு, இம்மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்ந்தீமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஜூலை மாதம் ஆகிவிட்ட நிலையில் இந்த தீர்ப்பால் மாணவர்கள் சேர்க்கையில் குழப்பமும் காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.

English summary
Chennai High court passed a order that 85% reservation of government in medical admission cancelled. And now TN government decided to go appeal in supreme court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X