For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாய தொழிலாளர்கள் கஷ்டத்தை போக்க ஊரக வேலை உறுதி திட்ட நாட்கள் 150ஆக அதிகரிப்பு- ஓபிஎஸ்

தமிழகத்தில் வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பத

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்துள்ளார். விவசாயம் இல்லாமல் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் மூலம் உதவி செய்ய அரசு முன்வந்துள்ளது.

"வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும்.

Tamilnadu government has increased national employment guaranty scheme days

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள், 3400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்" இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu government has increased national employment guaranty scheme days to 150 days as the state hit with drought.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X