For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரனுக்கு எகிறும் எம்.எல்.ஏக்கள் ஆதரவு... எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழுமா? - வீடியோ

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கூடியுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் கொடுத்தனர்.

 Tamilnadu political movement raised question about government stability

அதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது. பெரும்பான்மை பலத்தை 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியுடன் வெற்றி பெற்ற தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரியின் ஆதரவும் தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெறும் 113ஆக குறையும். அப்படியொரு சூழ்நிலை உருவானால் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் நிலை உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
In Tamilnadu present MLAs approach raised a question whether Edappadi government will continue or not among people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X