For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பாணியில்.. தமிழக அரசு விரைவு பஸ்களில் தட்கல் டிக்கெட்.. டிக்கெட் புக் செய்ய செல்போன் 'ஆப்'

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

Tatkal booking for Tamilnadu state transport buses

சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து நட வடிக்கை மேற்கொள்ள வசதியாக 10 சரகங்களுக்கும் ரூ.95 லட்சம் செலவில் அதிவேகம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள தானியங்கி பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.

ஒவ் வொரு போக்குவரத்து கழகத்தில் இருந்தும் ஆண்டு முழுவதும் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத் தாத பணிமனை ஒன்று தேர்ந் தெடுக்கப்பட்டு அதற்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அவசர வேலை காரணமாக உடனடியாக பயணம் மேற் கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் இதர அரசு போக்குவரத்துக் கழகங்களின் நெடுந்தூர பேருந்து களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த முறையில் பேருந்து ஒன்றுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும்.

மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெடுந்தூர பேருந்துகளுக்கு செல்போன் ஆப் வழி டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அதெல்லாம் ஓகே, பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழக அரசு பஸ்கள் எல்லாம் பாடாவதியாக போய்விட்டதே புது பஸ்கள் வாங்குவது குறித்து ஏன் கூறவில்லை என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.

English summary
Tatkal booking for Tamilnadu state transport buses, says minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X