அப்பல்லோவில் கடைசியாக கொடுத்த ஜூஸில் டோஸ் அதிகமானதே ஜெ. மரணத்துக்கு காரணம்?

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு கடைசியாக கொடுத்ஹ்ட ஜூஸில் சேர்க்கப்பட்ட 'திரவத்தின்' அளவு அதிகமானதே அவரது மரணத்துக்கு காரணம் என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த ஜெயலலிதாவுக்கு கடைசியாக கொடுக்கப்பட்ட ஜூஸில் வழக்கமாக சேர்க்கப்படும் "திரவத்தின்" அளவு அதிகமானதே அவரது மரணத்துக்கு காரணம் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி காலமானார். அவரது மர்ம மரணம் குறித்த சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை.

அப்பல்லோ வீடியோ

இந்த நிலையில் சசிகலாவால் ஜெயலலிதா தாக்கப்பட்டார் என ஓபிஎஸ் அணியின் பொன்னையன் கூறிவருகிறார். அதேநேரத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்தனோ, சசிகலாவும் ஜெயலலிதாவும் மருத்துவமனையில் பேசும் வீடியோ பதிவு இருக்கிறது என பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அந்த திரவம்தான்...

இதனிடையே ஜெயலலிதா உடல்நலம் தேறிவந்த போது அவருக்கு கொடுக்கப்பட்ட பழச்சாறில் வழக்கமாக சேர்க்கும் திரவத்தின் அளவில்தான் சிக்கல் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஜெயலலிதா வழக்கமாக அருந்தும் பழச்சாறுதான் என்றபோதும் அந்த திரவத்தின் அளவுதான் சிக்கலாகிவிட்டது என கூறப்படுகிறது.

மருத்துவர்களை மீறி பழச்சாறு

அத்தகைய பழச்சாறை ஜெயலலிதாவுக்கு கொடுத்திருக்கவே கூடாது என்று மருத்துவர்கள் கண்டித்திருக்கின்றனர். அதையும் மீறி கொடுக்கப்பட்ட அந்த பழச்சாறுதான் ஜெயலலிதாவின் இருதய துடிப்பு நின்று போக காரணம் என்றும் கூறப்படுகிறது.

விசாரணை வருமா?

இது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகள் வெளியே வரும் என்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. இரு கோஷ்டிகளும் இணைய உள்ள நிலையில் இந்த மர்மங்கள் விலகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Team OPS leaders questioned that Jayalalithaa's last day food at Apollo Hospital.
Please Wait while comments are loading...