தேனி அருகே ஓபிஎஸ் கார் மீது கல்வீச்சு- மர்ம நபர்கள் கரும்பு தோட்டத்தில் புகுந்து தப்பி ஓட்டம்!

தேனி அருகே ஓ. பன்னீர்செல்வம் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

By:
Subscribe to Oneindia Tamil

தேனி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கார் மீது தேனி அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஓபிஎஸ் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆர்கே நகரில் ஓபிஎஸ் அதிமுகவின் வேட்பாளராக நேற்று மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் குலதெய்வ கோவில்களில் வழிபாடு நடத்தினார் ஓபிஎஸ்.

Team Sasikala pelts stone at OPS Car

இந்த வழிபாட்டை முடித்துவிட்டு பெரியகுளம் திரும்பும் வழியில் ஓபிஎஸ் கார் மீது தேனி அருகே கல்வீசப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் கல்வீசிய மர்ம நபர்கள் அருகே இருந்த கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்து தப்பி ஓடிவிட்டனர். கல்வீச்சால் ஓபிஎஸ் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவரது கார் மட்டும் சேதமடைந்தது.

சசிகலா அதிமுகவினரே ஓபிஎஸ் கார் மீது கல்வீசியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

English summary
Team Sasikala Supporters today pelted stones at the O Panneerselvam's car near Theni.
Please Wait while comments are loading...