For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்ட நெரிசலை குறைக்க ரயிலில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

Temporary augmentation of Trains

1. சென்ட்ரல் - பெங்களூர் - சென்ட்ரல் இரட்டை அடுக்கு எக்ஸ்பிரஸ் (எண்.22625) ரயிலில் ஒரு ஏ.சி.சேர்கார் செப்டம்பர் 14ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை இணைக்கப்பட்டுள்ளது.

2. சென்ட்ரல் - விஜயவாடா - சென்ட்ரல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏ.சி.சேர்கார் பெட்டி செப்டம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை இணைக்கப்படுகிறது.

3. சென்ட்ரல் - பிகானர் - சென்ட்ரல் அனுரத் வாராந்திர ரயிலில் ஒரு ஏ.சி. இரண்டு அடுக்குபெட்டி வியாழக்கிழமை முதல் நவம்பர் 26ம் தேதி வரை சேர்க்கப்படுகிறது.

4. மதுரை - சண்டிகார் - மதுரை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம்வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று வருகிற 30ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை இணைக்கப்படுகிறது.

5. கன்னியாகுமரி - ஹவுரா - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரசில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று செப்டர்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை சேர்க்கப்படுகிறது.

6. நாகர்கோவில் - மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம்வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று வருகிற 31ம்தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இணைக்கப்படுகிறது.

7. நாகர்கோவில் - மும்பை - நாகர்கோவில் வாரம் இருமுறை செல்லக்கூடிய எக்ஸ்பிரசில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 29ம்தேதி வரை சேர்க்கப்படுகிறது.

8. எழும்பூர் - ஜோத்பூர் - எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

9. திருவனந்தபுரம் - மும்பை - திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 அடுக்கு ஏ.சி.பெட்டி ஒன்று நவம்பர் 7-ந் தேதியில் இருந்து 6.2.2016 வரை இணைக்கப்படுகிறது.

English summary
Southern railway has announced the trains will be temporarily augmented as explained .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X